என் ஜெபவேளை வாஞ்சிப்பேன்

1. என் ஜெபவேளை வாஞ்சிப்பேன்!
அப்போதென் துக்கம் மறப்பேன்:
பிதாவின் பாதம் பணிவேன்,
என் ஆசை யாவும் சொல்லுவேன்!
என் நோவு வேளை தேற்றினார்
என் ஆத்மபாரம் நீக்கினார்,
ஒத்தாசை பெற்றுத் தேறினேன்
பிசாசை வென்று ஜெயித்தேன் – என்

2. என் ஜெபவேளை வாஞ்சிப்பேன்!
மா தாழ்மையோடு பிரார்த்திப்பேன்!
மன்றாட்டைக் கேட்பார் வருவார்,
பேர் ஆசீர்வாதம் தருவார்,
என் வாக்கின்மேல் விஸ்வாசமாய்
என் பாதம் தேடு ஊக்கமாய்
என்றோர்க்கென் நோவைச் சொல்லுவேன்
இவ்வேளையை நான் வாஞ்சிப்பேன்! – என்

3. என் ஜெபவேளை வாஞ்சிப்பேன்!
ஆனந்தக் களிப்படைவேன்
பிஸ்காவின் மேலே ஏறுவேன்
என் மோட்ச வீட்டை நோக்குவேன்,
இத்தேகத்தை விட்டேகுவேன்
விண் நித்ய வாழ்வைப் பெறுவேன்,
பேரின்ப வீட்டில் வசிப்பேன்,
வாடாத கிரீடம் சூடுவேன்! – என்



en jepavelai vanjippen!

1. en jepavelai vanjippen!
appothen thukkam marappen:
pithavin padham paniven,
en aasai yavum solluven!
en novu velai thetrrinar
en aathmabaram neekkinar,
oththasai berruth therinen
pisasai vendru jayiththen – en

2. en jepavelai vanjsibben!
ma thazhmaiyodu pirarththibben!
manraddaik kedbar varuvar,
per aasarvadham dharuvar,
en vakkinmel visuvasamay
en padham thedu uukkamay
endrorkken novais solluven
ivvelaiyai nan vanjsibben! – en

3. en jepavelai vanjsibben!
aananthdhak kalibpadaiven
piskavin mele eeruven
en modcha veeddai nokkuven,
iththekaththai viddekuven
vin nithya vazhvaib peruven,
perinpa veettil vasippen,
vadadha kredam suduven! – en